முத்துப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மாணம்.முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கூட்டம் தலைவர் கி.மு.ஜெகபர் அலி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊடகம் மற்றும் செய்தி தொடர்ப்பாளர் மு.முகைதீன்பிச்சை, மாநில சிறுபாண்மை பிரிவு நிர்வாகி ஹாஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா அரசால் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய மாவட்ட மகளிர் காங்கிரஸ் பொருப்பாளர் கோமதி குகனுக்கு நன்றி தெரிவிப்பது. சமீபத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் முறையாக சென்றடைய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியில் சுகாதாரம் கெட்டு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அதனை பரவாமல் தடுத்து தமிழக அரசு பராபட்சமின்றி போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களை காக்க வேண்டும். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. அதனை அகற்ற பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நகர துணைத் தலைவர்கள் வேல்முருகன், குலாம் ரசூல், நகரச் செயலாளர் நாசர், துணைச் செயலாளர்கள் முத்தலிபு, குமார், மீனவர் அணி நிர்வாகி நிஜாம் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

படம் செய்தி: நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை

.
.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.