சவுதி அரேபியாவில் நாளை நகராட்சி தேர்தல்: முதன் முறையாக பெண்கள் ஓட்டுப்போட அனுமதி 

நாளை நடைபெறும் நகராட்சி தேர்தலில் சவுதி அரேபியாவில் பெண்கள் ஓட்டுப்போட முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

தேர்தலில் பெண்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் தற்போதைய மன்னர் சல்மான் அனுமதி அளித்தார். இந்த நிலையில் அங்கு நாளை (12–ந் தேதி) நகராட்சி தேர்தல் நடக்கிறது.

 

பெண்கள் தங்கள் வாழ்நாளில் முதன் முறையாக ஓட்டு போடுகிறார்கள். அதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் பெண்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

 

அங்கு அவர்கள் ஆண்களிடம் நேருக்கு நேராக முகத்தை பார்த்து பேசக்கூடாது. ஏதாவது தடுப்புக்கு பின்னால் நின்றே பேச வேண்டும். அல்லது அவர்களது ஆண் உறவினர்கள் உடன் இருக்க வேண்டும்.தேர்தல் பிரசாரத்துக்கு வாகனங்கள் மற்றும் விளம்பர பலகைகள் மற்றும் சமூக வலை தளங்களை பயன்படுத்த கூடாது. டெலிவிஷனில் தோன்றி பிரசாரம் செய்யக்கூடாது. அது போன்று ஆண் வேட்பாளர்களும் பெண்களிடம் நேருக்கு நேராக பேசி ஓட்டு கேட்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.