ஆபாச பாடல் விவகாரம்: சிம்பு தாயார் உஷா கண்ணீர்சிம்புவின் ஆபாச பாடல் விவகாரம் பெண்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த பிரச்சனையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் 17 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக பேசி இருந்தார். அதில், சிம்புவின் பாடல் தமிழக பெண்களின் மனதை நெருடி இருந்தால், அந்த களங்கத்தை கண்ணீரால் துடைக்க விரும்புகிறேன் என்று உருக்கமாக பேசி இருந்தார்.

இந்த நிலையில் சிம்புவின் தாய் உஷா, கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ள வீடியோ ஒன்று இன்று வாட்ஸ்–அப்பில் வெளியானது. அதில் உஷா கூறியிருப்பதாவது:–

என் மகன் செய்ததை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. அப்படி என்ன தப்பு செய்து விட்டார் சிலம்பரசன். வீட்டுக்குள் வைத்து பாடப்பட்ட பாடல் ஒன்றை, வேண்டாம் என்று தூக்கி எறிந்த பாடலை யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். இதற்காக தினமும் டி.வி.வீடியோ கேமராக்கள் எனது வீட்டையே சுற்றி வருகின்றன.

எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை. வீட்டுக்கு வெளியில் வந்து கோலம்கூட போட முடியவில்லை. சிலம்பரசனை தூக்கில் போட வேண்டும் என்கிறார் ஒருவர். அப்படி என்னங்க அவரு தப்பு பண்ணி விட்டார்.

சிம்புவை போலீஸ் தேடுகிறது. சிம்புவை போலீஸ் தேடுகிறது என்று தினமும் செய்திகள் வருகின்றன. எந்த போலீஸ்கிட்டங்க அவரை ஒப்படைக்கணும் நான் ஒப்படைக்கிறேன். நீங்களே வச்சுக்குங்க. அவரையே கார்னர் பண்றாங்க. சிம்புவோட உயிர் வேண்டுமா? இல்லை இந்த தாயோட உயிர் வேண்டுமா? என்னோட உயிரை எடுத்துக்கோங்க.. என்னை தூக்கில் போடுங்கள்.

என்னங்க ஊரு இது. தமிழ்நாடே வேண்டாம். குடும்பத்தோட எங்காவது சென்று பிழைத்துக் கொள்கிறோம். எங்களை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நன்றி.

இவ்வாறு பேசியுள்ள உஷாவின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது. அதனை துடைத்துக்கொண்டே அவர் பேசுவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

 

வீடியோவைக்காண............

https://www.facebook.com/513672162125841/videos/541088469384210/?video_source=pages_finch_main_video&theater
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.