திருப்பூர் பள்ளியில் 1–ம் வகுப்பு மாணவன் கொலை: கைதான 6–ம் வகுப்பு மாணவன் வாக்குமூலம்.திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உதயபிரபா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் சிவராமன் (5). திருப்பூர் கே.வி.ஆர். நகரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தான்.


நேற்று பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற மாணவன் சிவராமன் பள்ளி கழிவறையில் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தான். இதையடுத்து அலறியடித்துக் கொண்டு பெற்றோர் ஓடிச்சென்று மாணவனின் உடலைப்பார்த்து கதறி அழுதனர்.


இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் மற்ற மாணவர்களின் பெற்றோரும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அவர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.


சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் திஷாமிட்டல், சுந்தரவடிவேல் மற்றும் திருப்பூர் மத்திய போலீசாரும் விரைந்து சென்று மாணவன் சாவு குறித்து விசாரணை நடத்தினர். முகம் மற்றும் தலையில் பலத்த காயம் இருந்ததால் மாணவனை யாரோ அடித்து கொலை செய்து இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது சிவராமனை இதே பள்ளியில் படிக்கும் 6–ம் வகுப்பு மாணவன் ஒருவன் அழைத்து சென்றதை சிலர் பார்த்து உள்ளனர். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவன் சிவராமனை கல்லால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.


இதையடுத்து போலீசார் அவனிடம் எதற்காக கொலை செய்தாய்? என்று கேட்டனர். அதற்கு அந்த மாணவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:–


நாங்கள் 2 பேரும் தினமும் ஒரே பஸ்சில் தான் பள்ளிக்கு சென்று வந்தோம். அப்போது நாங்கள் இருவரும் கிண்டல் செய்து விளையாடி கொண்டு இருப்போம். அப்போது பிரச்சினை ஏற்பட்டால் நாங்கள் மாற்றி மாற்றி திட்டி கொள்வோம்.


எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் அவன் என்னை நீ தமிழ் படித்து விட்டு வந்து என்னை திட்டிப்பார் என்று கூறிவந்தான். நேற்றும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி பஸ்சில் இருந்து இறங்கியதும் அவனை கழிவறைக்கு அழைத்து சென்றேன். அங்கு வைத்து நாங்கள் 2 பேரும் அடித்து கொண்டோம். இதில் அவன் கீழே விழுந்ததும் அங்கிருந்த கல்லை எடுத்து அவனது தலையில் போட்டு விட்டு சென்றேன்.


அப்போது சிவராமன் எழுந்து மீண்டும் நடந்து வந்தான். அவன் மீது இருந்த காயத்தை காட்டி என்னை ஆசிரியரிடம் மாட்டிவிடுவான் என்று பயந்த நான் பெண்கள் கழிவறை அருகே வந்த போது மீண்டும் அவனை கீழே தள்ளினேன். அப்போது தலையில் காயம் அடைந்து கீழே விழுந்த அவன் எழுந்திருக்கவே இல்லை. பின்னர் பயந்து போன நான் வகுப்பறைக்கு சென்று விட்டேன்.


பின்னர் தான் சிவராமன் இறந்தது தெரியவந்தது. பள்ளிக்கு விடுமுறை விட்டதும் நானும் வீட்டிற்கு சென்று விட்டேன். பின்னர் போலீசார் வீட்டிற்கு வந்து என்னை பிடித்து சென்றனர்.


இவ்வாறு மாணவன் கூறினான்.


இதையடுத்து அவனை கைது செய்து திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.


தொடர்ந்து மாணவன் சிவராமின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோனை செய்யப்பட்டு மாணவன் சிவராமனின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவன் கொலை செய்யப்பட்டதால் பள்ளிக்கு வருகிற 31–ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பள்ளி முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.POLIMER NEWS_20160128_1735.ts_snapshot_00.06_[2016.01.28_12.06.30]

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.