கரூரைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் 3 உலக சாதனை புரிந்தார். படங்கள் இணைப்பு.ஜெட்லி சாதனை புத்தகத்தில் இடம் பெறும் வகையில் கரூரைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர்  3 உலக சாதனை புரிந்தார்.

ஜெட்லி சாதனை புத்தகத்தில் பதிவு செய்யும் வகையில்  தாந்தோணி மலை பகுதியில் 3 சாதனை நிகழ்வுகள் நடை பெற்றது. இதில் தனியார் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவர் சுரேஷ் பாலாஜி ஸ்கேட்டிங் செய்தவாறு வாலிபாலை தட்டிக் கொண்டே 24 நிமிடம் 31 வினாடிகளில் 10கிமீ தூரம் செல்லும் நிகழ்ச்சி முதல் நிகழ்ச்சியாக நடை பெற்றது. (முந்தைய சாதனை 30 நிமிடம் 6 கிமீ)

2 வது சாதனை நிகழ்ச்சியாக, 1100 கிலோ எடையுள்ள வேனை கண்ணைக் கட்டிக் கொண்டு, இரு கைகளால் 200 மீ தூரத்தை 5 நிமிடம் 35 வினாடிகளில் இழுக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. (முந்தைய சாதனை 100 மீட்டர் 5 நிமிடம்).

மூன்றாவது சாதனை நிகழ்ச்சியாக மெடிசின் பந்தில் 21 நிமிடம் 18 வினாடிகள் நிற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. (முந்தைய சாதனை 8 நிமிடம்)

மூன்று சாதனைகளும் ஜெட்லி புக் ஆப் ரிக்கார்ட்ஸில் இடம் பெறுவதாக நடுவர் ஜெட்லி அறிவித்து சாதனை புரிந்ததற்கான சான்றிதழ்களை வழங்கினார். இந் நிகழ்ச்சியில், மாணவரின் பெற்றோர் ராமகிருஷ்ணன். ராஜேஸ்வரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

[gallery columns="2" ids="30304,30305,30306,30307,30308,30309,30310,30311,30312,30313,30314,30315,30316,30317,30318,30319,30320,30321,30322,30323,30324,30325,30326"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.