துபாய்-கொச்சி நகரங்களுக்கிடையே தினசரி விமானச்சேவை: 11-ம் தேதி முதல் ஏர் இந்தியா தொடங்குகின்றது.மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துபாய் நகரை கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான கொச்சியுடன் இணைக்கும் தினசரி விமானச்சேவையை ஏர் இந்தியா நிறுவனம் வரும் 11-ம் தேதி தொடங்குகின்றது.

அபுதாபி, சார்ஜா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு வாரத்துக்கு 74 விமானச் சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் தற்போது இயக்கி வருகின்றது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங்கள் ஒன்றிணைந்து வாரந்தோறும் முன்னூறுக்கும் அதிகமான விமானச் சேவைகளை இயக்கி வருகின்றன.

தற்போது, புதிதாக துபாய் - கொச்சி நகரங்களுக்கிடையே தினசரி விமானச்சேவையை தொடங்கவுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. வரும் 11-ம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த புதிய சேவைக்காக புத்தம்புதிய A320 ரக விமானம் வாங்கப்பட்டுள்ளது.

180 இருக்கைகளை கொண்ட இந்த விமானம் தடம் எண்: AI-934 ஆக (உள்ளூர் நேரப்படி) பிற்பகல் 1.30 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு (உள்ளூர் நேரப்படி) இரவு 7.10 மணியளவில் கொச்சி நகரை வந்தடையும்.

அதற்கு எதிர்திசையில் தடம் எண்: AI-933 ஆக (உள்ளூர் நேரப்படி) காலை 9.35 மணிக்கு கொச்சியில் இருந்து புறப்பட்டு (உள்ளூர் நேரப்படி) பிற்பகல் 12.35 மணியளவில் துபாய் சென்றடையும் என ஏர் இந்தியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.