துபாயின் சொகுசு ஹோட்டல் தீ விபத்தில் 14 காயம்.துபாயின் சொகுசு ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டுதினக் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன்னர் ஏற்பட்ட தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை.

புத்தாண்டு தினத்தை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான வேடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக இந்த தீ ஏற்பட்டது.

அங்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிவதைக் காணக் கூடியதாக உள்ளது என அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

எனினும் தீயணைப்புத் துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் எனவும் அவர் கூறுகிறார்.

இதனிடையே திடீரென ஏற்பட்ட இந்தத் தீ குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அட்ரஸ் டவுண்டவன் எனும் 63 மாடிகளைக் கொண்ட அந்த ஹோட்டலின் பக்கவாட்டில் தீ எரிந்தது.

இச்சம்பவத்தில் குறைந்தது 14 பேர் காயமடைந்துள்ளனர்.துபாயில் புத்தாண்டு பிறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பாக 63 மாடிக் கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் சிலர் காயமடைந்தாலும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இத்தீக்கான காரணம் பற்றி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.