நடுவானில் விமானத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறிய 184 பயணிகள்.மும்பையில் இருந்து இன்று காலை புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மும்பையில் இருந்து பாங்காங் வழியாக வியட்னாமின் ஹோசிமினுக்கு, இன்று காலை 9.30 மணியளவில் ஜெட் ஏர்வேஸின் போயிங் 739 ரக விமானம், 184 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, பாங்காங் சென்றடைய ஒரு மணி நேரம் இருந்த நிலையில், பயணிகள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியுள்ளனர்.

விமானப் பணிப் பெண்கள், அவசர அவசரமாக பயணிகளுக்கு ஆக்சிஜன் மாஸ்க்குகளை வழங்கியதால், பயணிகள் மூச்சுத் திணறலில் இருந்து தப்பியுள்ளனர். விமானம், மியான்மர் தலைநகர் யாங்கூன் அருகே பறந்து கொண்டிருந்த நிலையில் யாங்கூன் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி அனுமதி கேட்டுள்ளனர்.

அங்கு தரையிறங்க அனுமதி கிடைத்ததை அடுத்து, விமானம் மதியம் தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு தேவையான வசதிகள், யாங்கூன் விமான நிலையத்தில் செய்து தரப்பட்டுள்ளது.

பின்னர் டெல்லியில் இருந்து மற்றொரு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், தொழில் நுட்ப வல்லுநர்கள் யாங்கூன் சென்று, விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளை ஆராய்ந்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் அளித்துள்ள விளக்கத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக யாங்கூன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

மேலும், பயணிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.