அயல் நாட்டு வாழ்க்கையின் அவலம்...19 வருடங்களாக தாயகம் செல்லாமல், பெற்ற மகன் முதன் முதலாக தன் தந்தையின் உடலை பெறப்போகும் பரிதாபம்.பிறந்த நாள் முதல் தனது தந்தையை பார்க்க இயலாமல் முடிவாக இறந்த தனது தந்தையின் உடலை பெறுவதற்காக காத்திருக்கும் இந்த சிறுவனின் தந்தை பெயர் கிருஷ்ணன் பாபு.

இவர் 29 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபிய நாட்டிற்கு வேலைக்கு வந்தவர். இவரால் இவரது கடைசி 19 ஆண்டுகளுக்கு சொந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் செல்ல இயலவில்லை. காரணம் கடந்த 17 ஆண்டுகள் சவுதி நாட்டில் இகாமா என்னும் குடியுரிமை பெறாமல் அங்கேயே தங்கி வேலை செய்து தனது குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டார். இவரது உடல் சவுதி அரேபிய நாட்டில் ரியாத் என்ற நகரில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இவர் யார் என்ற அடையாளம் தெரியாததால் இவரை அநாதை பிணமாக வைத்திருந்தனர்.

இவருக்காக மருத்துவமனை செய்த செலவையும், உடலை வேறு இடத்திற்கு மாற்ற ஆன செலவையும் கொடுக்க கூட யாரும் முன் வரவில்லை. இந் நிலையில் இவர் கேரளாவை சேர்ந்த கிருஷ்ணா எனவும் அறியப்பட்டு, அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியாதில் உள்ள சில சமுக இஸ்லாமிய அமைப்பின் முயற்சியால் இவரது உடல் வரும் திங்கள் அன்று சொந்த நாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சி நடைபெற்று வருகிறது.

பிறந்து 19 ஆண்டுகள் கழித்து இவரது சொந்த மகன் தனது தந்தை முகத்தை உயிரோடு இருக்கும் போது பார்க்க முடியாமல் போன வருத்தங்களுடன் தனது தந்தையின் இறந்த உடலை பெறுவதற்காக காத்திருக்கிறார்.

நமக்காகவும் எல்லோருக்காகவும் துவா செய்யுங்கள் சகோதரர்களே.....

இதுதான் அயல் நாட்டு வாழ்க்கை.....


முகம்மது எம். அபுதாஹிர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.