நாகூரில் பெண் குரலில் பேசி அழைத்து வாலிபரிடம் 2 செல்போன் பறிப்பு 2 பேர் கைது.நாகூரில் பெண் குரலில் பேசி வாலிபரை தென்னந் தோப்புக்கு வரவழைத்து தாக்கி 2 செல்போன்களை பறித்து சென்ற 2 பேர் கைது செய்யப் பட்டனர்.

நாகை மாவட்டம் நாகூர் மாப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் முகமது உசைன். இவரது மகன் முகமது அப்துல் காதர் என்கிற மன்சூர் (26). இவர் இன்டர் நெட்டில் தொடர்பு கொண்டு பலரிடம் பேசி கொண்டிருப்பார்.

இதை தெரிந்து கொண்ட நாகூர் மியான் தெருவை சேர்ந்த கொறடா சாதிக் என்கிற ஜெகபர் சாதிக் (31), செம்மரக் கடை தெருவை சேர்ந்த தமிமூன் அன்சாரி (30) ஆகியோர் செல்போனில் அப்துல் காதரை தொடர்பு கொண்டு பெண் குரலில் பேசினர்.

பின்னர் திட்டச் சேரியில் உள்ள ஒரு தென்னந் தோப்புக்கு அப்துல் காதரை அழைத்தனர். அவர்களை பெண் என்று நம்பிய அப்துல் காதர், திட்டச் சேரியில் உள்ள தென்னந் தோப்புக்கு சென்றார். அங்கிருந்த கொறடா சாதிக், தமிமூன் அன்சாரி ஆகியோர் சேர்ந்து அப்துல் காதரை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து ரூ.18,000 மதிப்புள்ள 2 செல் போன் பறித்தனர்.

இதை தொடர்ந்து போலீசில் புகார் செய்தால் கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து திட்டச் சேரி போலீசார் வழக்குப் பதிந்து சாதிக், தமிமூன் அன்சாரியை கைது செய்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.