மலேசியாவில் இருந்து திருச்சிக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் உட்பட 2 பேர் கைது.



மலேசியாவில் இருந்து திருச்சிக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப் பட்டனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. நேற்று முன் தினம் இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மேட்டுப் பாளையத்தை சேர்ந்த ஜெயபாலன் மனைவி கலாராணி (45) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மாரிமுத்து மகள் ராஜேஸ்வரி (45) என்ற போலி பெயர், முகவரியில் பாஸ் போர்ட் எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கலாராணியை இமிகிரேசன் அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். கைது செய்து வழக்கு பதிந்த போலீசார் கலாராணியை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி மகளிர் சிறையில் அடைத்தனர்.

இதே போல் நேற்று காலை மலேசியாவில் இருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த ராமு மகன் முத்து குமார் (37), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ளிக் கோட்டை முத்து வேல் மகன் லோகேஸ்வரன் (37) என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்து வந்தது தெரிய வந்தது.

இவரையும் கைது செய்த ஏர் போர்ட் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.