20 ரூபாய்க்கு விற்க வேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 59 ரூபாயா? கொந்தளிக்கும் காங்கிரஸ்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நேற்று குறைத்துள்ளன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 85 காசுகளும் குறைக்கப்பட்டன.

இதையடுத்து, சற்று நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது. இதற்கு, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா தெரிவித்தவை பின்வருமாறு:-

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.19.40 காசுகளுக்குத்தான் விற்பனையாக வேண்டும். ஆனால், ரூ.59.03 காசுகளாக விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.15.71 காசுகளுக்குத்தான் விற்பனையாக வேண்டும். ஆனால், ரூ.44.18 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது.

கடந்த 2014, மே 26-ந்தேதி பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற போது இருந்த விலையை விட தற்போது கச்சா எண்ணெய்யின் விலை 72.21 சதவீதம் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை சில பைசாக்களை குறைத்துவிட்டு கலால் வரியை 8-வது முறையாக உயர்த்தியிருப்பதே சாதாரண மக்களுக்கு கச்சா எண்ணெய்யின் விலை சரிவின் பலன் சென்றடையாமல் உள்ளதற்கு காரணம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.