காரை வழிமறித்து நகை கடை அதிபரிடம் 200 பவுன் நகை கொள்ளை: கும்பலை மடக்கி பிடித்த போலீசார்.விழுப்புரத்தில் நகை கடை நடத்தி வருபவர் ஜெயராமன் (வயது 59). இவர், ஆர்டரின் பேரில் சிறிய நகை கடைகளுக்கு நகை தயாரித்து கொடுப்பது வழக்கம்.அதுபோல் நேற்று இரவு திட்டக்குடி கடை வீதியில் நகை கடை நடத்தி வரும் சுப்பிரமணியன் என்பவருக்கு சில நகைகளை கொடுத்து விட்டு மீதி 200 பவுன் நகை மற்றும் ரொக்க பணத்தை எடுத்து கொண்டு காரில் விழுப்புரம் திரும்பி கொண்டு இருந்தார். காரை டிரைவர் ஓட்டி வந்தார். காரின் பின் இருக்கையில் ஜெயராமன் நகை மற்றும் பணத்துடன் அமர்ந்து வந்தார்.


இரவு 11 மணி அளவில் திட்டக்குடி அருகே அரங்கூர் என்ற இடத்தில் சென்ற போது வேக தடைக்காக கார் மெதுவாக ஏறி இறங்கியபோது பின்னால் வந்த கார் திடீரென ஜெயராமன் காரை வழிமறித்தது. காரில் இருந்து திபுதிபுவென இறங்கிய 5–க்கும் மேற்பட்டவர்கள் ஜெயராமன் அமர்ந்திருந்த காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தனர். பின்னர் ஜெயராமன் வைத்திருந்த நகை மற்றும் பணப் பையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் காரில் தப்பி சென்றனர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராமன் இது பற்றி உடனடியாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் உத்தரவின் பேரில் கடலூர்–விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அப்போது நகை பறித்து சென்ற கொள்ளை கும்பல் வேப்பூர் – சேலம் செல்லும் சாலையில் செல்வது தெரிய வந்தது.


உடனே இதுபற்றி கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உஷார் அடைந்து அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் தப்பி வந்த கொள்ளை கும்பல் போலீசார் வாகன சோதனை நடத்துவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.


உடனே போலீசார் 8 பேர் கொண்ட கொள்ளை கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த 200 பவுன் நகை மற்றும் கட்டுக்கட்டாக ரொக்க பணம் ஆகியவற்றை கைப்பற்றினர்.


பின்னர் கொள்ளை கும்பலையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகை–பணத்தையும் ராமநத்தம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.