முத்துப்பேட்டை அருகே 2006ல் மாயமான புத்தர் சிலை ராமநாதபுரத்தில் கண்டுபிடிப்பு.முத்துப் பேட்டை அருகே 2006ல் காணாமல் போன புத்தர் சிலை, ராமநாதபுரத்தில் கண்டு பிடிக்கப் பட்டது. அந்த சிலையை மீட்டுத் தர வேண்டு மென முத்துப் பேட்டை போலீசில் பொது மக்கள் புகார் செய்தனர்.

முத்துப் பேட்டை அடுத்த இடும்பாவணம் ஊராட்சி கற்பக நாதர் குளம் காடு வெட்டியை சேர்ந்தவர் ஆசிரியர் பழனி வேல். இவரது தென்னந் தோப்பில் 4 அடி உயரமுள்ள பழமை வாய்ந்த புத்தர் சிலை இருந்தது. இதை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொது மக்கள் வணங்கி வந்தனர்.

இந் நிலையில் 2006ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி நள்ளிரவு புத்தர் சிலை காணாமல் போனது. இது குறித்து முத்துப் பேட்டை காவல் நிலையத்தில் அப்போதைய ஊராட்சி தலைவர் சந்திர சேகரன், ஆசிரியர் பழனி வேல் தலைமையில் கிராம மக்கள் புகார் செய்தனர்.

இந் நிலையில் கடந்த டிசம்பர் 1ம் தேதி தினகரன் நாளிதழில் ராம நாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆனந்தூர் அருகில் உள்ள சம்மந்த வயல் கிராமத்தில் ஒரு வயலில் 11ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளதாக படத்துடன் செய்தி பிரசுரமாகியிருந்தது. இந்த சிலையை பார்ப்பதற்கு பொது மக்கள் முடிவெடுத்தனர்.

அதன் படி நேற்று காலை ஒரு வேனில் கிராம மக்கள் 15 பேர் சென்று சம்மந்த வயல் கிராமத்தில் இருந்த புத்தர் சிலையை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் கிராமத்தில் காணாமல் போன புத்தர் சிலை தான் என்பதை உறுதி செய்தனர்.

இதை தொடர்ந்து முத்துப் பேட்டை போலீசில் ஆசிரியர் பழனி வேல் தலைமையில் பொது மக்கள் புகார் செய்தனர். அதில் 2015ம் ஆண்டு தோப்பில் இருந்த புத்தர் சிலையை மர்ம நபர் ள் திருடி சென்று விட்டனர். தற்போது அந்த சிலை, ராமநாதபுரத்தில் உள்ளது. இதனால் புத்தர் சிலையை மீட்டுத் தர வேண்டுமென தெரிவித்திருந்தனர்.

புகார் மனுவை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.