2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ரூபாயின் மதிப்பு கடும் சரிவு.சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறைவு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் ரூபாய் சரிவு மதிப்பு சரிவு காரணமாக புதன் கிழமை பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக பொருளாதார வளர்ச்சி குறையும் என்று சர்வதேச செலாவணியின் அறிவிப்பு முதலீட்டார்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 28 டாலருக்கும் கீழே சென்றதால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின.

வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 560 புள்ளிகள் சரிவடைந்து 23,925 புள்ளிகளாக இருந்தது. நிப்டி 170 புள்ளிகள் இழந்து 7,263 புள்ளிகளில் காணப்பட்டது. அந்நிய நிறுவன முதலீட்டார்களின் பங்கு விற்பனை டாலர் மதிப்பு உயர்வு போன்றவற்றால் ரூபாயின் மதிப்பு குறைந்து 68.13 காசாக காணப்படுகிறது. இது 71 காசு குறைவாகும்.

2013 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ரூபாயின் மதிப்பு 68 ரூபாய்க்கும் கீழே வந்துள்ளது இதுவே முதல்முறையாகும். கவலையடைந்த முதலீட்டார்களின் பங்கு விற்பனையால் எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., டிசிஎஸ், இன்போசிஸ், ஐடிசி, எல்.என்.டி., ரிலையன்ஸ், எச்.டி.எப்.சி வங்கி உள்ளிட்ட பெரும்பாலான பங்குகள் விலை சரிந்து காணப்படுகின்றன.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 88 உயர்ந்து 19,856--க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 2,482யாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 37.10 உள்ளது.-
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.