2016ல் 24 தகுதிகளுடன் குடியிருக்க சிறந்த நாடுகளில் முதலிடம் பிடித்த நாடு ஜெர்மனி.



சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் குடியிருக்க சிறந்த நாடாக ஜெர்மனி தேர்வாகியுள்ளது.

உலகில் 2016 ஆம் ஆண்டு வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியலை உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் பொருட்டு உலக பொருளாதார மையம் உலகின் 60 நாடுகளில் இருந்து தகவல்களை சேகரித்துள்ளது.

இதில் நிலைத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், வணிகம், வாழ்க்கை தரம், பாரம்பரியம் மற்றும் பொருளாதார செல்வாக்கு என 24 தகுதிகளை கொண்டு இந்த பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

இத்தகவல்களை சேகரிக்க 16,200க்கும் அதிகமான மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது எனவும், அதில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

2016ம் ஆண்டில் வாழத் தகுந்த நாடுகளில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகளில் ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிடன், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க்.

இந்த பட்டியலில் இந்தியா 22வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து போர்ச்சுகல், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.