2,100 பேரை காப்பாற்றிய யூனுசுக்கு அண்ணா பதக்கம்: அதிரை அபுபக்கருக்கு கோட்டை அமீர் பதக்கம்.சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை 4 பேருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அவர்கள் விவரம் வருமாறு:–


1. எம்.எஸ்.பாஸ்கர், கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்.


டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் நீலாங்கரை, பாலவாக்கம், வெட்டுவாங்கேணி, பெத்தேல் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கிய போது அங்குள்ள மக்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மீனவர்கள் உதவியுடன் 1,500 பேர்களை காப்பாற்றினார்.


2. சீனிவாசன், நங்கநல்லூர்.


மெரீனா கடற்கரையில் குளித்துக் கொண்டு இருந்த குணசேகரன் என்ற வாலிபரை கடல் அலை இழுத்துச் சென்ற போது அவரது தாயார் பிரபா காப்பாற்ற முயன்ற போது அவரும் கடல் அலையில் சிக்கினார். அப்போது மெரீனாவை சுற்றிப்பார்க்க வந்த சீனிவாசன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் இருவரையும் காப்பாற்றினார்.


3. செல்வன் ரிஷி, சீர்காழி திருமுல்லைவாசல்.


நாகை மாவட்டம் திருமுல்லைவாசல் கடலில் குளித்துக் கொண்டு இருந்த சகாபுதீன், சமீர் பாரி ஆகிய இருவரை கடல் அலை இழுத்துச் சென்றது. அவர்களை கடலில் இறங்கி செல்வன் ரிஷி காப்பாற்றினார்.


4. முகமது யூனுஸ், சூளைமேடு சவுராஷ்டிரா நகர், சென்னை.


17.11.2015 அன்று ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது முகமது யூனுஸ் முயற்சியால் 1,500 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 300 வீடுகளில் தங்க வைக்கப்பட்டனர். 2.12.2015 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 600 பேரை காப்பாற்றினார்.


1.12.2015 அன்று ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் சித்ராவை மீட்டு பெருங்களத்தூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் சித்ரா–கணவர் மோகன் ஆகியோர் அந்த குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டனர். முகமது யூனுசின் தன்னலமற்ற தீர செயல்களை பாராட்டி அரசு அவருக்கு அண்ணாபதக்கம் வழங்கப்பட்டது.


பதக்கம் பெற்ற 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் சான்றிதழ்கள் ஆகியவற்றை முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.


மதநல்லிணக்கத்துக்காக பாடுபட்ட அதிராம்பட்டினம் எம்.பி. அபுபக்கருக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது. இவருக்கு பதக்கமும் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, சான்றிதழ்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.


கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்காக தஞ்சை மாவட்ட மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், நாகை மாவட்டம் புதுப்பட்டினம் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, தர்மபுரி மாவட்டம் ஏர்யூர் போலீஸ் ஏட்டு ராஜூ ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.


இவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை, பதக்கம் வழங்கப்பட்டது.


திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை கடைப்பிடித்து அதிக உற்பத்தியை ஈட்டிய மதுரை திருப்பாலை கிராமத்தைச் சேர்ந்த பெண் பிரசன்னாவுக்கு பதக்கமும், ரூ.5 லட்சத்துக்கான காசோலையும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.


இவர் அரை ஏக்கருக்கு 3,223 கிலோ தானிய மகசூல் மற்றும் ஹெக்டேருக்கு 16,115 கிலோ தானிய மகசூல் செய்துள்ளார். இது மாநிலத்திலேயே அதிக விளைச்சல் ஆகும்.


POLIMER NEWS_20160127_0249.ts_snapshot_01.16_[2016.01.26_21.16.56]


POLIMER NEWS_20160127_0249.ts_snapshot_01.18_[2016.01.26_21.21.19]

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.