மும்பையில் இருந்து 2 லட்சம் டாலர் கடத்திவந்த விமானி அமெரிக்காவில் கைது.இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்து சட்டத்தை மீறிய வகையில் 2 லட்சம் அமெரிக்க டாலர்களை கடத்திவந்த விமானியை டெல்லாஸ் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.

அமெரிக்க விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றிவரும் அந்தோணி வார்னர்(55) என்பவர் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெல்லாஸ் நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் இருந்து விமானம் மூலம் பயணித்து அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூஆர்க் லிபர்டி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அவர் தோளில் மாட்டியிருந்த லேப்டாப் பையை பரிசோதித்த சுங்கத்துறை அதிகாரிகள் பையினுள் கத்தைகத்தையாக அமெரிக்க டாலர் நோட்டுகளும், தங்க நகைகளும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அந்தப் பணம் மற்றும் நகைகள் எங்கிருந்து வந்தன? என்பது தொடர்பாக சரியான பதில் அளிக்காததால் அவரிடமிருந்த இரண்டு லட்சம் டாலர்கள், 10 தங்க மோதிரங்கள், 4 ஜதை காதணிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தோணி வார்னர், ஒருலட்சம் டாலர் சொந்த ஜாமினில் விடுதலையாகியுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் பத்தாண்டு சிறைதண்டனையுடன் இரண்டரை லட்சம் அபராதமும் விதிக்கப்படும். பிடிபட்ட பணம் மற்றும் தங்க நகைகளும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.