2-வது மாடியிலிருந்து விழுந்தும் உயிர் தப்பி எழுந்து நடந்த குழந்தை. அதிர்ச்சி வீடியோ:பிரேசிலில் 2–வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்தது.

பிரேசில் நாட்டில் உள்ள டி.ஆர்.ஆர். பகுதியை சேர்ந்த 1½ வயது பெண் குழந்தை செவினா. சம்பவத்தன்று இவள் 2-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் பகுதியில் நின்று விளையாடிக் கொண்டிருந்தாள்.

அந்த ஜன்னலில் தடுப்பு கம்பிகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த செவினா 2–வது மாடியில் இருந்து வெளியே தவறி விழுந்தாள். இந்த காட்சியை ரோட்டில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து மனம் பதறினர். கீழே விழுந்த குழந்தை செவினாவை தூக்க ஓடோடி வந்தனர். ஆனால் அக்குழந்தை காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், விழுந்த வேகத்தில் குழந்தை செவினா அதிவேகமாக எழுந்து ஒன்றுமே நடைபெறாதது போன்று விறு..விறு...வென எழுந்து நடக்க முயற்சி செய்தது. இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. இதற்கிடையே தவறி விழுந்த தனது குழந்தை என்ன கதிக்கு ஆனதோ? என பதறியடித்துக் கொண்டு செவினாவின் பெற்றோர் ஓடோடி வந்தனர். நல்ல வேளையாக குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை.

குழந்தை 2–வது மாடியில் இருந்து கீழே விழும்போது குறுக்கே சென்ற டெலிபோன் வயரில் சிக்கியதால் வேகம் குறைந்து பலத்த அடியோ, காயமோ ஏற்படவில்லை என நிபுணர்கள் கூறினர்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ:

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.