சிங்கப்பூரில் அடிதடி வழக்கில் 2 இந்திய வாலிபர்களுக்கு சிறைத்தண்டனை.சிங்கப்பூரில் மோதல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இரண்டு இந்திய வம்சாவளி வாலிபர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியர்களான லோகேஸ்வரன் சுப்பிரமணியன், சசி குமார் அசோகன் ஆகியோர் ஒரு கிளப்பில் இருந்து வெளியே வந்தபோது, தனபாலன், ரூபி மற்றும் 4 பேர் சேர்ந்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒருவருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைதுசெய்தனர்.

இவ்வழக்கின் விசாரணையின்போது தனபாலன் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூவிக்கு நான்கரை ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கி இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதவிர தலா 6 பிரம்படியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களின் கூட்டாளிகள் 4 பேருக்கும் 21 முதல் 24 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.