முத்துப்பேட்டை அருகே வாலிபர் கொலை வழக்கில் கள்ளக் காதலியின் 2 மகன்கள் கைது.முத்துப்பேட்டை அருகே வாலிபர் கொலை வழக்கில் கள்ளக் காதலியின் 2 மகன்கள் கைது செய்யப் பட்டனர்.


முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் குணசேகரன்(35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். குணசேகரன் தன் மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுவார். அதனால் இருவருக்கும் தகராறு ஏற்படுவது வழக்கம்.


இந் நிலையில் குணசேகரனுக்கு முத்துப் பேட்டை அடுத்த கீழ நம்மங்குறிச்சியை சேர்ந்த கணவனை இழந்த விஜய லெட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி மதியம் அதே கிராமத்தில் உள்ள நாகராஜன் என்பவரது சாகுபடி வயலில் குணசேகரன் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.


விஜயலெட்சுமி, இவரது மகன்கள் கவியரசன், கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று மதியம் கீழ நம்மங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள கவியரசன்(27), கண்ணதாசன்(24) ஆகிய இருவரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். அவர்களை முத்துப் பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.


தினகரன்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.