நாகை அருகே வங்கி செயலாளரை கொலை செய்து ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள்- 4 லட்சம் ரூபாய் கொள்ளை.நாகை மாவட்டம் கீழ் வெண்மணியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது.

இந்த வங்கியில் கீழ் வெண்மணி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியின் செயலாளராக இருஞ்சியூரை சேர்ந்த காமராஜ் பணியாற்றி வந்தார். நகை மதிப்பீட்டாளராக கணபதி உள்ளார். நேற்று மாலை அவர்கள் இருவரும் பணியில் இருந்தனர்.

வங்கியில் இருந்த பணம், நகைகளை காமராஜும், கணபதியும் சரிபார்த்து கொண்டிருந்தனர். அப்போது வங்கிக்குள் சில மர்ம மனிதர்கள் வாடிக்கையாளர்கள் போல் இருந்தனர். அவர்கள் திடீரென நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

இதனை செயலாளர் காமராஜ் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த நைலான் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கினார்கள்.

கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க வங்கி செயலாளர் காமராஜ் போராடினார். என்றாலும் கொள்ளையர்கள் கழுத்தை இறுக்கி அவரை கொன்றனர்.

பின்னர் அங்கிருந்த மின் விசிறியில் அவரை தொங்க விட்டனர். இதனை பார்த்து நகை மதிப்பீட்டாளர் கணபதி அதிர்ச்சி அடைந்தார்.

உதவி கேட்டு கணபதி கூச்சலிட்டார். உடனே அவரை கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் காயம் அடைந்தார்.

அவரது வாயில் பிளாஸ்டிக்கால் ஒட்டி அங்கிருந்த நாற்காலியில் கட்டி வைத்தனர். பின்னர் வங்கி லாக்கரை திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்தனர். லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த 3 கோடி மதிப்புள்ள நகைகளை வாரி சுருட்டி அள்ளினார்கள். மேலும் லாக்கருக்குள் இருந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்தனர்.

பிறகு நகை, பணத்தை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு அவர்கள் தப்பி சென்று விட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ. 3 கோடியாகும்.

கொள்ளையர்கள் தப்பிச் செல்லும்போது வங்கியின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனால் கொள்ளை நடந்த விபரம் அந்த பகுதி மக்களுக்கு முதலில் தெரியவில்லை.

உள்ளே அடைத்து வைக்கப்பட்டு இருந்த நகை மதிப்பீட்டாளர் சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து உதவி கேட்டு அலறினார். இரவு அந்த வழியாக சென்ற ஒருவர் அந்த அலறல் சத்தம் கேட்டு கீழ் வேளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வங்கி கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நகை மதிப்பீட்டாளர் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், வங்கி செயலாளர் கொலை செய்யப்பட்டு கிடந்ததையும் பார்த்தனர்.

நகை மதிப்பீட்டாளர் கணபதியை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட காமராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ் குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

POLIMER NEWS_20160130_0202.ts_snapshot_00.08_[2016.01.29_20.13.56]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.