கரப்பான் பூச்சி உணவு சாப்பிட வலியுறுத்திய காப்பகம் 30 குழந்தைகள் மீட்பு.உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகர், கிரேட்டர் நோடியா, மற்றும் ஹைபத்பூர் கிராமத்தில் பிஸ்ரா பகுதியில் இமானுவேல் சேவை குழு என்ற அமைப்பு இயங்கி வந்தது. இந்த குழு சட்ட விரோதமாக இயங்கி வந்து உள்ளது.

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய திடீர் சோதனையில் இந்த அமைப்பிடம் இருந்து ஏழு குழந்தைகள் அழுக்கடைந்த மிகவும் மோசமான நிலையில் மீட்கபட்டனர். அந்த குழந்தைகள் உடலில் போசாக்கு இன்றி காணபட்டனர். இதே அமைப்பு மீரட் நகரில் நடத்திய தங்குமிடத்தில் இருந்து 23 குழந்தைகள் மீட்கபட்டுள்ளனர்.

அங்கிருந்த குழந்தைகளை பெற்றோர்கள் பார்க்க அனுமதி அளிக்கவில்லை என்ற புகாரின் பேரில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு உள்ளனர்.

இது குறித்து சுரக்ஷா தன்னார்வ தொண்டு அமைப்பின் திட்ட மேலாளர் சத்ய பிரகாஷ் கூறியதாவது:-

பாதிக்கபட்ட குழந்தையின் தாயார் கடந்த டிசம்பர் 28 ந்தேதி எங்களை அணுகினார். நாங்கள் போலீசாரின் உதவியை நாடினோம். இதை தொடர்ந்து இந்த காப்பகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தான் இந்த அமைப்பு சட்டவிரோதமாக இயங்கி வந்தது தெரிய வந்தது.

2 காப்பகங்களில் இருந்து 30 குழந்தைகளை மீட்டு உள்ளோம் குழந்தைகள் உடலில் சத்து இன்று மிகவும் பலவீனமாக உள்ளனர். குழந்தைகளை இந்த அமைப்பினர் பல்வேறு இடங்களுக்கு மாற்றி உள்ளனர். மேலும் இந்த அமைப்பினர் குழந்தைகளுக்கு கரப்பான் பூச்சி இருந்த உணவை கொடுத்து உண்ண வற்புறுத்தி உள்ளனர்.

மீடகப்பட்ட குழந்தைகளில் 9 வயது சிறுவன் ஒருவன் கூறும் போது

எங்களை எங்கள் பெற்றோர்களை பார்க்க அனுமதிப்பது இல்லை. அப்படி அனுமதித்தாலும் மாதத்திற்கு 15 நிமிடம் தான் சந்தித்து பேச முடியும். நான் பைபிளை மட்டுமே நினைக்க வேண்டும். அதனை என்னை மனப்பாடம் செய்ய வலியுறுத்தினர். நன்கொடையாளர்கள் முன் எங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். எங்களை எருமை கறியை சாப்பிட வலியுறுத்தினர்.

பார்வையாளர்கள் வந்தால் எங்களை புதிய ஆடைகள் அணிவித்து வரிசையாக நிக்க வைத்து பைபிள் வாசகங்களை கூற சொல்லுவர். தவறாக சொன்னால் பிறகு பிரம்பால் அடிப்பர். பார்வையாளர்கள் சென்றதும் புது ஆடைகளை கழற்றி விடுவர். எங்களுக்கு கொடுத்த இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை வாங்கி கொள்வர். மேலும் எங்களை கிறிஸ்டியனாக மதம்மாறுமாறு வற்புறுத்தினர். என கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.