ரூ.3 கோடி பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வீணாக்கிய பெண். வீடியோ இணைப்பு.பிரித்தானிய நாட்டில் 33 மில்லியன் பரிசு தொகையை வென்ற லாட்டரி சீட்டை பெண் ஒருவர் எதிர்பாராமல் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டதால் அவருக்கு பரிசு தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் Camelot என்ற லாட்டரி நிறுவனம் 33 மில்லியன் பவுண்ட் பரிசுக்காக லாட்டரியை கடந்த 9ம் திகதி விற்பனை செய்துள்ளது.

இந்த பரிசு சீட்டை Worcester நகரை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று 33 மில்லியன் பரிசை வென்ற லாட்டரி சீட்டு Worcester நகரில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், பரிசு சீட்டின் உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிப்பு வெளியானது.

இதனை தொடர்ந்து லாட்டரி சீட்டை வாங்கி அந்த பெண் மற்றும் அவரது மகள் அந்த சீட்டை பல இடங்களில் தேடியுள்ளனர்.

பின்னர், துணிகளை துவைக்கும் இயந்திரத்தில் இருந்த ஜீன்ஸ் உடுப்பில் கிழிந்திருந்த அந்த சீட்டை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும், பரிசை வென்ற எண்களை சரிப்பார்த்தபோது அந்த எண்கள் மிகச்சரியாக பொருந்தியுள்ளது.

ஆனால், பரிசு சீட்டில் இருந்த திகதி மற்றும் Bar code ஆகியவை தண்ணீரில் நனைந்து கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

இந்த தகவலை சேகரித்த அந்த பெண், இது குறித்து செய்தி ஏஜெண்ட் நிறுவனம் ஒன்றிற்கு விவரங்களை அளித்துள்ளார்.

இதன் மூலமாக லாட்டரி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. பெண்ணை தொடர்புக்கொண்ட நிறுவனத்தினர் லாட்டரியில் உள்ள தகவல்கள், எங்க வாங்கப்பட்டது? திகதி மற்றும் நேரத்தை உடனடியாக தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

எனினும், பெண்ணிற்கு உறுதியாக பரிசு தொகை கிடைக்குமா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ஏனெனில், பரிசு சீட்டு விற்பனை ஆன நாள் முதல் 180 நாட்களுக்கு உறுதியான முடிவினை நிறுவனம் அறிவிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.