சவுதி அரேபியா மசூதிக்குள் துப்பாக்கி சூடு: 3 பேர் உயிரிழப்பு.சவுதி அரேபியாவில் உள்ள மசூதியில் நேற்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகினர்.

மெகாசின் பகுதியில் உள்ள இமாம் ரெசா மசூதியில் வெள்ளிக்கிழமை ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டபோது உள்ளே புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் 3 பேர் இறந்ததாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், இது தொடர்பாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த முகமது அல்-நிமர் கூறும்போது, ‘துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல் கிடைத்ததும் மசூதியைச் சுற்றி பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். ஆம்புலன்ஸ்களும் வந்தன. மசூதிக்குள் துப்பாக்கியால் சுட்ட நபர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க முயன்றபோது அவரை பள்ளிக்கு வந்தவர்கள் தடுத்துவிட்டனர்’ என்றார்.


Attack on Shiite Mosque in Eastern Saudi Arabia Kills 3

Two gunmen wearing suicide bomb belts attacked a Shiite mosque in eastern Saudi Arabia during Friday prayers, an assault that killed at least three people and one bomber and wounded 18, authorities said.

The attack struck the Imam Reda Mosque in the neighborhood of Mahasen, an area popular with Shiite workers of the state-run Saudi Arabian Oil Co., the world's largest oil-producing firm.

One attacker detonated his explosives, while the other opened fire, the Interior Ministry said in a statement carried by the state-run Saudi Press Agency. The other attacker was stopped by worshippers from blowing himself up, it said.

The dead included two security officers and a civilian, as well as a suicide bomber, authorities said.

In the attack's chaotic aftermath, Saudi police fired assault rifles into the air to drive away an angry mob that surrounded a police car holding a suspected attacker, according to video shot from the scene.

Shiites in Saudi Arabia make up some 10 to 15 percent of the ultra-conservative, Sunni-ruled kingdom's population. The minority group, many of whom live in the country's oil-producing east, previously have been targeted in attacks by the Islamic State group, which views Shiites as heretics. No group immediately claimed Friday's attack.

Earlier this month, Saudi officials executed prominent Shiite cleric Nimr al-Nimr, who comes from the east of the country, raising tensions in the area.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.