பெண் போலீஸ் ஏட்டு உள்பட 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சென்னை போலீஸ்காரர்.சென்னை ஆயுதப் படையில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் அருணன். இவரது சொந்த ஊர் அறந்தாங்கி ஆகும். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் முதலில் திருமணம் நடந்தது.

பின்னர் அருணன் மதுரையில் பணியாற்றினார். அப்போது திருப்பரங்குன்றத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு காளியம்மாளுடன் தொடர்பு ஏற்பட்டது. காளியம்மாளை திருமணம் செய்ய அருணன் விரும்பினார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாகவும் அதற்காக விண்ணப்பம் செய்திருப்பதாகவும் அருணன் ஏமாற்றினார். இதை நம்பி காளியம்மாளும் அருணனை திருமணம் செய்ய சம்மதித்தார்.

காளியம்மாளின் பெயரை ஜனனி என்று மாற்றி அவரை அருணன் திருமணம் செய்து தனியாக குடி வைத்தார்.

இந்த நிலையில் அருணன் சென்னைக்கு மாறுதல் ஆனார். அப்போது வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தில் வேலை பார்த்த கவிதா என்ற பெண்ணுடன் அருணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. கவிதா ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனக்கு மனைவி இல்லை என்று கூறி கவிதாவை அருணன் 3–வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அருணன் 3 பெண்களை மணந்தவர் என்பது காளியம்மாளுக்கும், கவிதாவுக்கும் தெரியவந்தது. இதுபற்றி கவிதா மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். இதே போல் ஏட்டு காளியம்மாளும் புகார் செய்திருந்தார்.

இதன்பேரில் போலீஸ்காரர் அருணனிடம் விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர் 3 பெண்களை திருமணம் செய்தது உறுதியானால் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.