4 மணி நேரத்தில் 23 முறை மாரடைப்பு வந்தும் உயிர் பிழைத்த அதிசய மனிதர்.இட்ஸ் ஏ மெடிக்கல் மிராக்கல் என்ற சொல்லாடலுக்கு பொருத்தமானது இந்த நிகழ்வு. கேரளாவை சேர்ந்த 60 வயது நபர் 4 மணிநேரத்தில் 23 முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டும் உயிர் பிழைத்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.

பெயர் வெளியிடப்படாத அந்த நபர், நீண்ட நாட்களாக புகைப்பழக்கம் கொண்டவர். சம்பவத்தன்று தனது 7-வயது பேரனுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு வந்துள்ளது. அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டபடியே இருந்துள்ளது. இதனால் அதிக வசதிகள் கொண்ட மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பதற்குள் மேலும் பல முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஷாக் அளித்து அவரது இதயத்திற்கு ரத்தம் செல்வதை உறுதி செய்த பிறகே மாரடைப்பு வருவது நின்றுள்ளது.

பொதுவாக ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் மாரடைப்பு வந்தாலே அவரை காப்பாற்றுவது கடினம். இந்நிலையில் ஒருவருக்கு 4 மணிநேரத்தில் 23 முறை மாரடைப்பு வந்தும், உயிர் பிழைத்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் அதிசயமாக கருதப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.