அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 4வது இடத்தில் இந்தியாஅதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 4வது இடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நியூ வேர்ல்டு வெல்த் என்கிற அமைப்பு மேற்கொண்ட ஆசிய பசிபிக் நாடுகள் 2016, என்ற ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள தனிநபர் சொத்து குறித்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

2015 ஆண்டு இறுதி நிலவரப்படி, இந்த பட்டியலில் 12.60 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்ட ஜப்பான் முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2.36 லட்சம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பணக்காரர்கள் சுமார் பத்து லட்சம் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக) மற்றும் அதற்கு மேலும் சொத்து கொண்டவர்களாக உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 4,83,000 ஆக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சீனா 6.54 லட்சம் கோடீஸ்வரர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா 2.90 லட்சம் கோடீஸ்வரர்களுடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தனிநபர் வருமானம் குறைவாக உள்ள இந்தியா இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துள்ளது ஆச்சர்யமளிப்பதாக உள்ளது என அந்த ஆய்வு கூறுகிறது.

மேலும், ஆசிய பசிபிக் நாடுகளில் மட்டும் சுமார் 35 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்றும், இவர்களது மொத்த சொத்து மதிப்பு 17.7 லட்சம் கோடி டொலர்களாக உள்ளது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.