முத்துப்பேட்டையில் ஹோட்டல், கடைகளில் வேலைபார்த்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு.முத்துப் பேட்டையில் ஹோட்டல் மற்றும் கடைகளில் வேலை செய்த 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப் பட்டனர்.

சமூக பாதுகாப்புத்துறை மற்றும் காவல் துறை இணைந்து ஆபரேஷன் ஸ்மைல் என்ற சமூக குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல் படுத்தி வருகின்றன. இத் திட்டத்தின் கீழ் காணாமல் போன, வீட்டை விட்டு வெளியேறிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் ஆகியோரை மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

அதன் படி நேற்று திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையில் எஸ்பி ஜெயசந்திரன் உத்தரவுப்படி திருத்துறைப் பூண்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் எஸ் எஸ் ஐக்கள் திருத்துறைப் பூண்டி கனகசபை, எடையூர் சுப்பிரமணியன், கலப்பால் பக்தவச்சலம், விக்கிர பாண்டியம் தர்மலிங்கம், முத்துப் பேட்டை ராமானுஜம், திருக்களார் ஏட்டு பன்னீர் செல்வம் மற்றும் திருவாரூர் சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மரியதாஸ், சமூக பணியாளர் மகேஸ்வரி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் மணிமாறன் கொண்ட குழுவினர் வியாபார நிறுவனங்கள், ஹோட்டல் போன்றவற்றில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் முத்துப் பேட்டை அடுத்த மங்கலூர் வடக்கு அய்யப்பன் மகன் யசோதன்(15), முத்துப் பேட்டை தெற்கு தெரு முகம்மது ஹனீபா மகன் முகம்மது சிபிரியல் (16), அதே பகுதி முகைதீன் அப்துல் காதர் மகன் இக்லாஸ் அகமது (15), சாகிப் தெரு சிக்கந்தர் பாவா மகன் முகமது லாசிக்(15), சேதுபாவா சத்திரம் மீனவர் காலனி சீனி முகம்மது மகன் மன்சூர் அலி கான்(15) ஆகிய 5 சிறுவர்களை மீட்டு முத்துப் பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்களின் பெற்றோர் வரவழைக்கப் பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி சிறுவர்களை ஒப் படைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.