அமீரகத்தில் உளவு பார்த்த இந்தியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.ஐக்கிய அரபு அமீரகத்தில் உளவு பார்த்த குற்றத்திற்காக இந்தியர் ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த மனார் அப்பாஸ் என்பவருக்கு தான் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளுக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் ஏமன் ராணுவம் தொடர்பான ரகசியங்களை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பரிமாறியது தான் அப்பாஸ் மீதான குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஐக்கிய அரபு எமிரேட் உச்ச நீதிமன்றம் இன்று இந்த அதிரடியான தீர்ப்பினை வழங்கியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தண்டனை காலம் முடிந்தவுடன் குற்றவாளி அப்பாஸ் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் லட்கணக்கான வெளிநாட்டவர் வேலை செய்து வருகின்றனர். இதில் அதிக அளவில் தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள். முன்னதாக உளவு பார்த்ததாக பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

asde
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.