பதன்கோட் தாக்குதல் சம்பவம்: உடம்பில் 6 தோட்டாக்கள் துளைத்தும் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய வீரர்.பதன்கோட் தாக்குதலின்போது உடலில் 6 குண்டுகள் பாய்ந்தும் தீவிரவாதிகளை முன்னேறவிடாமல் தடுத்த ராணுவ வீரர் ஒருவர் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமான தளத்திற்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். சுமார் 80 மணி நேரம் தொடர்ந்த இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எனினும் தீவிரவாதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் போரிட்ட ராணுவ வீரர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்குள் நுழைந்தவுடன் அவர்களை தடுப்பதற்காக அதிகாலை 3 மணிக்கு கருடா கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 12 வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

அப்போது சைலேஷ் மற்றும் அவரது சக வீரர் கட்டல் இருவரும் தீவிரவாதிகள் மேற்கொண்டு முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

இந்த தாக்குதலில் போது சைலேஷின் உடலில் 6 குண்டுகள் பாய்ந்தது. எனினும் அவர் தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்.

பின்னர் குண்டு பாய்ந்து 3 மணிநேரம் கழித்து சைலேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.