ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் போதையில் ரகளை. வாலிபர்களுக்கு 60,000 அபராதம்விமானத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 இளைஞர்களுக்கு 60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படுகிறது. தினமும் அதிகாலை 2.20 மணிக்கு திருச்சி வந்து, 3.10 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூர் செல்லும்.

நேற்று அதிகாலை வழக்கம்போல் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது துணை விமானி அட்சை பதக், திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, 2 இளைஞர்கள் தன்னிடமும், விமான பணிப்பெண்களிடமும் தகராறு செய்வதாக கூறினார்.

இதனிடையே, திருச்சிக்கு விமானம் வந்தடைந்தது. துணை விமானி குறிப்பிட்ட 2 இளைஞர்களிடமும் சி.ஐ.எஸ்.எப். விசாரணை நடத்தினர். இதில், சென்னை சூளைமேடுவை சேர்ந்த அப்துல் பாசித் (27), சிவகங்கை காமராஜ் நகரை சேர்ந்த ஷேக் அப்துல்லா (27) என்பது தெரியவந்தது.

இருவரும் குடிபோதையில் இடம் மாறி இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். இதனை கண்ட விமானப்பணி பெண்கள், தங்களுக்குரிய இருக்கையில் அமருமாறு கூறியுள்ளனர். ஆனால் இருவரும் பணிப்பெண்களிடம் தகராறு செய்து சீட்பெல்ட்டை பிய்த்து எறிந்துள்ளனர். இதனை தடுக்க வந்த உதவி கேப்டன் பதக்கை திட்டியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்பதாகவும், மதுபோதையில் இதுபோன்று நடந்துவிட்டதாகவும் கூறி கதறி அழுதனர். இதனால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து, விமானத்தில் தகராறு செய்தது மற்றும் சீட்பெல்டை கிழித்தது போன்ற செயலுக்காக ஏர்இண்டியா நிறுவன அதிகாரிகள் 60 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனை இருவரும் உடனடியாக செலுத்தினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.