70 பயணிகளை இறக்கி விட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ராய்ப்பூர் செல்லும் விமானத்தில் 70 பயணிகள் சிறுபிள்ளைத்தனமாக தங்கள் இஷ்டத்திற்கு இருக்கைகளில் அமர்ந்ததால் ஏற்பட்ட தகராறையடுத்து அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூருக்கு செல்வதற்காக இன்டிகோ விமானம் தயாராக இருந்தது. அதில் ஒரே குழுவாக டிக்கெட் எடுத்திருந்த 70 பயணிகள் ஏறினர்.

அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல், இஷ்டத்துக்கு ஏற்றபடி இருக்கையை மாற்றிக் கொண்டே இருந்தனர். அவரவருக்கு ஒதுக்கிய சீட்டில் அமரும்படி விமான ஊழியர்கள் கூறிய போதும் 70 பயணிகளும் அதைக் கண்டு கொள்ளாமல் விமான ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் இந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் தனது பையால் விமான ஊழியரை தாக்க முயன்றுள்ளார்.

புறப்படத் தயாராக இருந்த விமானத்திற்குள் ஏற்பட்ட இந்த திடீர் அமளி குறித்து உடனடியாக விமான நிலையத்தில் இருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீசாருடன் வந்து, குழுவாக ஏறிய 70 பயணிகளையும் விமானத்தை விட்டு இறக்கினர்.

இது குறித்து இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம்,‘‘முறைகேடாக நடந்து கொண்டதால், 70 பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். விமான பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு பயணிகளை, நிலைய ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்து கூச்சலிட்டதோடு விமான பணியாளர்களை அவர்கள் மிரட்டி தாக்க முயன்றனர். அவர்களை இறக்கிவிடும்படி மற்ற பயணிகளும் கூறியதால், குழுவாக வந்த 70 பேரையும் இறக்கிவிட்டோம்.’’ என தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.