80 கோடி பயனாளிகளைத் தாண்டியது பேஸ்புக் மெசேஞ்ஜர் ஆப்.உலகின் பிரபல மெசேஞ்ஜிங் அப்பிளிகேஷான ஃபேஸ்புக் நிறுவனத்தின் "மெசேஞ்ஜர்" ஆப் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை 80 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகளவில் வாட்ஸ் அப், மெசேஞ்ஜர், ஸ்நாப்சேட், வைபர் போன்ற மெசேஞ்ஜிங் அப்பிளிகேஷன்கள்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் 2015ம் ஆண்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மெசேஞ்ஜிங் அப்பிளிகேஷாக "மெசேஞ்ஜர்" ஆப் உள்ளதாக ஆய்வு நிறுவனமான நீல்சன் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசேஞ்ஜர் ஆப் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை 80 கோடியைத் தாண்டியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு மெசேஞ்ஜிங் அப்பிளிகேஷான வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை 90 கோடிக்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.