ஸ்பைஸ்ஜெட் குடியரசு தின சலுகை: உள்நாட்டில் பயணிக்க ரூ.826 முதல் விமான டிக்கெட்.ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் குடியரசு தின சிறப்பு டிக்கெட் விற்பனை என்ற சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் படி உள்நாட்டிற்குள் ஒரு வழி பயணம் மேற்கொள்ள குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.826 முதல் தொடங்குகிறது. சர்வதேச விமானங்களில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3026 ஆகும். இன்று முதல் 27-ம் தேதி நள்ளிரவு வரை 3 நாட்களுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் மூலம் பிப்ரவரி 01-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும் நேரடி விமான சேவை கொண்ட வழித்தடங்களுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை பொருந்தும்.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் www.spicejet.com, ஸ்பைஸ்ஜெட் மொபைல் அப் மற்றும் ஸ்பைஸ்ஜெட் முகவர்களை அணுகலாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.