93 வயதிலும் உழைத்து வாழும் இசக்கியாபிள்ளை.நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வடக்கு அய்யனூர் தெருவில் மெயின் பஜாரில் காலை உணவகம் நடத்துகிறார் 93 வயதான இசக்கியாபிள்ளை. இவர் கடை இட்லி மிகவும் பிரபலம். இட்லி, தேங்காய் சட்னி, மல்லி சட்னி, உ.வடை மட்டுமே.

காத்திருந்துதான் சாப்பிடவேண்டும். 13 வயதில் இந்த தொழிலுக்கு வந்தவர் இன்று வரை உழைப்பை மட்டுமே நம்புகிறார். காலை 5 மணிக்கெல்லாம் குளித்து, இறைவனை வணங்கிய பிறகு நடந்தே தான் கடைக்கு வருவார்.

இவர் வீட்டிலிருந்து கடைக்கு சுமார் 1.1/2 கிலோ மீட்டர் வரும். இன்றைய இளைஞர்களுக்கு உழைப்பின் முன் மாதிரி இவர். உழைப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதற்கு இந்த இசக்கியாபிள்ளை ஒரு முன்னுதாரனம்.

சாதனையே செய்யாமல் வாழ்நாள் சாதனையாளர் என சொல்பவர்களுக்கு மத்தியில் இவர் ஒரு மிகப்பெரிய வாழ்நாள் சாதனையாளர்தான். நெஞ்சை நிமிர்த்து தலைவணங்குகிறேன் இந்த (இளைஞர்) முதியவர் இசக்கியாபிள்ளைக்கு!!

கவுன்சிலர் மாரியப்பன்.

10341999_1011521092256109_8990514072114045049_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.