துபாயில் தள்ளுபடி கட்டணத்தில் சிறப்பு மருத்துவ முகாம்.இப்போது முன்பதிவு செய்து எப்போது வேண்டுமானாலும் பிரசவிக்கலாம் என்ற சலுகையோடு துபாயில் தள்ளுபடி கட்டணத்தில் சிறப்பு மருத்துவ முகாம்நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

துபாயில் தம்பே மருத்துவமனையில் நாளை காலை 9 மணியிலிருந்து இரவு 11 மணிவரை நடைபெறும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களிடம் இலவச ஆலோசனைகளைப் பெறலாம்.

மேலும், கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் இந்த முகாமில் 299 திர்ஹம் (1 திர்ஹம் என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 18 ரூபாய்) செலுத்தி முன்பதிவு செய்துகொண்டால் இந்த மருத்துவமனையில் எப்போது வேண்டுமானாலும் 4,999 செலவில் சுகப்பிரசவமும், 8,999 திர்ஹம் செலவில் சிசேரியன் ஆபரேஷன் மூலம் அறுவை சிகிச்சையின் மூலம் பிரசவமும் பார்த்துக் கொள்ளலாம் என தம்பே மருத்துவமனை குழுமம் அறிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.