துபாயில் உள்ள அட்ரஸ் ஹோட்டலில் ஏற்பட்ட தீ.துபாயில் உள்ள அட்ரஸ் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துபாயில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிக் கொண்டிருந்தோது வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு அட்ரஸ் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. 63 தளங்கள் கொண்ட கட்டிடத்தின் 20வது தளத்தில் இருக்கும் வீட்டின் திரைச்சீலைகளில் தீப்பிடித்துள்ளது. அந்த தீ அட்ரஸ் ஹோட்டலுக்கும் பரவியுள்ளது.

63 தள கட்டிடம் கொழுந்துவிட்டு எரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக துபாய் அரசு தெரிவித்துள்ளது.

அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பால்கனியில் நின்று தீ விபத்தை நேரில் பார்த்த ப்ரூஸ் செபான்ஸ்கி கூறுகையில்,

அங்கு தீ விபத்து ஏற்பட்ட 9 மணிநேரத்திற்கு பிறகு அந்த கட்டிடத்தின் பாகங்கள் இடிந்து விழுந்த சப்தம் கேட்டது. தீ கொழுந்து விட்டு எரிந்ததை பார்த்து பயந்தேன் என்றார்.

ஏதோ சப்தம் கேட்டது. வானவேடிக்கையை விரைவில் துவங்கிவிட்டனர் என்று நினைத்தேன். அதன் பிறகு மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்ததை பார்த்த பிறகே தீ விபத்து பற்றி தெரியும். தீ வேகமாகப் பரவியது என்றார் ஜாக்குலின் ஹர்டாடோ.

வீடியோவைக்காண............https://www.facebook.com/931323463567841/videos/1103325646367621/?video_source=pages_finch_main_video&theater
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.