துபாயில் எடுத்த செல்பியால் விபரீதம்.. அமீரக நண்பர்களே எச்சரிக்கை...துபாய் ஓட்டலில் நடந்த தீ விபத்தின்போது, அதன்பின்னணியில் செல்பீ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தம்பதிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கோபுரம் அருகிலுள்ள 63 மாடி கொண்ட டவுன் டவன் ஓட்டலில் புத்தாண்டு இரவு கொண்டாட்டம் நடந்தது. ஓட்டலின் 20வது மாடியில் திடீரென தீப்பிடித்து, மற்ற மாடிகளுக்கும் பரவியது. இதையடுத்து அங்கு கூடியிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதில் 16 பேருக்கு காயமேற்பட்டது. இந்நிலையில், தீ விபத்து நடந்த ஓட்டலின் அருகிலுள்ள மாடியிலிருந்து ஒரு தம்பதியினர் செல்பீ எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்தனர்.

அதில், ‘‘எங்களது இனிய துபாய்க்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். ஆச்சரியப்படும் விதத்தில் பட்டாசுகள் வெடித்து எங்களை வரவேற்கிறீர்கள்’’ என்று புத்தாண்டு செய்தியையும் வெளியிட்டனர்.

இந்த புகைப்படத்தை கண்ட சிலர், இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும், சிலர் இது கண்டிக்கத்தக்க வகையில் எடுக்கப்பட்ட செல்பீ என்றும் கருத்துகளை வெளியிட்டு உள்ளனர்.

இதே போல் இரு வாலிபர்கள் ஹோட்டலில் பெரும் துயரம் நிகழ்ந்த நிலையில், எரிந்து கொண்டு இருக்கும் ஹோட்டலுக்கு முன்னால் நின்று சிரித்துக்கொண்டு ‘செல்பி’ புகைப்படம் எடுத்த இவர்களின் செயல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளத்தில், ‘செல்பி’ மோகத்தால் இரக்கம் இல்லாமல் செயல்படும் சில நபர்களின் செயல் மிகுந்த கண்டனத்திற்கு உரியது’ என பலர் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் இந்த இரு வாலிபர்களையும் வழக்கு பதிவு செய்து துபாய் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வாலிபர்கள் இதற்கு முன்பு எவ்வித குற்றமோ அல்லது குற்ற பின்னணியோ இல்லாததை கருத்தில் கொண்டு அவர்களை கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தனர்.

ஆகவே அமீரகத்தில் இருக்கும் நண்பர்களே நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் அமீரக சட்டதிட்டத்தின் படி சமூக வலைத்தளத்தில் நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்கும் விதமாகவோ, தனி நபர் தாக்குதலோ (சில பேர் 24 மணிநேரமும் இதையே பிழைப்பாக கொண்டுள்ளனர் என்பதுதான் மிகவும் வருத்தமான செய்தி), வீண் வதந்திகளை பரப்புதல், அடுத்தவர் சுதந்திரம் தலையிடல் போன்றவைகள் பெரும் குற்றமாகும். இவ்வித குற்றங்கள் நிருபிக்கபட்டால் குறைந்த பட்சம் 3 வருட சிறை தண்டனை மற்றும் Dhs 30,000/- அபராதமும் விதிக்கப்படும். அமீரக வாழ் நண்பர்கள் இதை கருத்தில் கொண்டு எச்சரிகையாக இருக்கவும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.