ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

விலங்குகள் நலவாரியம் உள்ளிட்ட தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வில் இருந்து வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.

விலங்குகள் நலவாரியம் சார்பாக வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார். அவர் தமது வாதத்தில், “ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே உள்ள அறிக்கையை மீற முடியாது. புதிய அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க புதிய அம்சத்தை சேர்த்தது சரியல்ல” என்று கூறினார்.

மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரால் முகுல் ரோஹக்கி ஆஜராகி வாதாடினார். புதிய அறிக்கையில் காளைகளை வதை தொடர்பாக கவனத்தில் கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு தேவையெனில் உச்சநீதிமன்றம் நிபந்தனை விதிக்கலாம் என்று அவர் கூறினார். தமிழக அரசு சார்பில் ராஜேஸ்வர ராவ், சேகர் நாப்டே ஆகியோர் ஆஜராகினர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அனுமதி அளித்த மத்திய அரசின் அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, "காட்சிப்படுத்தப்படும் விலங்குகள்" பட்டியலில் உள்ள காளையை நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் ஈடுபடுத்த வகை செய்யும் அரசாணையை மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனுதாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.