நடுவானில் பயணி இறந்ததால், விமானம் அவசரத் தரையிறக்கம்.சிங்கப்பூரிலிருந்து வந்துக் கொண்டிருந்த ‘டைகர் ஏர்’ விமானம் இன்று பேங்காக் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. சியாங்மையிலிருந்து புறப்பட்ட இந்த ‘டைகர் ஏர்’ விமானப் பயணத்தின் போது சிங்கப்பூர் பயணி ஒருவர் விமானத்திலேயே இறந்து போனார்.

58 வயதுடைய அவர், தனது தாய்லாந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வீடு திரும்பும் வழியில் இந்த துயரம் நடந்தது என்று, தாய்லாந்து செய்தி நிறுவனம் கூறியது.

அவர், தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அவரது தாய் மனைவி தெரிவித்துள்ளார்.

அவருக்கு மருத்துவ உதவி வேண்டி, விமானியிடம் அவரது மனைவி அணுகினார். ஆனால், விமானம் தரையிறங்கும் முன்னரே விமானத்திலேயே அவர் இறந்து விட்டார்.

அவரது உடலை, பின்னர், போலீசார் பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படைத்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.