பட்டப்பகலில் பயங்கரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஹ்மான் சரமாரி வெட்டி படுகொலை.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர், காஞ்சிபுரம் பகுதியில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். செய்யார் சிப்காட் தொழிற்சாலையில் வீணாகும் இரும்பு ‘ஸ்கிராப்களை’ வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். இதற்கான குடோன் காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன்தாங்கல் கிராமத்தில் உள்ளது.

அப்துல்லாபுரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், வெண்பாக்கம் ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வந்தார். அப்துல் ரகுமானின் மனைவி அமீபாபீவி (30). இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளான். அப்துல்ரகுமானின் குடோனில் ஆண்கள், பெண்கள் உள்பட 20க்கு மேற்பட்டோர் வேலை பார்க்கின்றனர். தற்போது, ஆண் தொழிலாளர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பெண் தொழிலாளர்கள் மட்டும் வேலை செய்து வருகின்றனர்.

இதை எப்படியே தெரிந்து கொண்ட மர்ம கும்பல் ஒன்று திடீரென காலை 11 மணியளவில் தொழிற்சாலைக்குள் புகுந்தது. அவர்களை பார்த்ததும் பெண் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் அருகில் இருந்த அறைக்குள் புகுந்து ஒளிந்து கொண்டனர். இதனால், பாதுகாப்பு இல்லாத நிலையில் நிர்கதியாக அப்துல்ரகுமான் இருந்தார்.

இதை பயன்படுத்தி 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கத்தி, வீச்சரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் அப்துல்ரகுமானை சுற்றி வளைத்தது. அவர் வேறு எங்கும் தப்பியோடிவிட முடியாதபடி தலை, கழுத்து, முகம், மார்பு என சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில், அவர் தரையில் சாய்ந்தார். இதை ஒளிந்து இருந்த பார்த்த, பெண்கள் அலறி கூச்சலிட்டனர்.

உடனே மர்மநபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி, அனைவரையும் அங்கிருந்த அறையில் தள்ளி பூட்டினர். பெண்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். பொதுமக்களை கண்டதும், மர்மநபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அப்துல்ரகுமானை, மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல்ரகுமான் இறந்தார். தகவலறிந்து திருவண்ணாமலை எஸ்பி பொன்னி, காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி, இன்ஸ்பெக்டர்கள் சாரதி, பிரபாகர் மற்றும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

அப்துல்ரகுமான் கொலைக்கு, கலப்பு காதல் திருமணம் செய்து வைத்தது காரணமா? இரும்பு ஸ்கிராப் தொழில் போட்டி காரணமா? ரியல் எஸ்டேட் தொழிலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டவர்கள் கொலை செய்தார்களா, சினிமா தயாரிப்பில் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால், கொலை செய்யப்பட்டரா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

பட்டப்பகலில் குடோனில் புகுந்து, ஊரட்சி மன்ற தலைவரை, மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

கொலையில் முடியும் இரும்பு ஸ்கிராப் தொழில் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர், கடந்த சில மாதங்களுக்கு முன், அப்துல்ரகுமானை சந்தித்துள்ளனர். அப்போது, அவர் இரும்பு ஸ்கிராப் எடுக்கும் தொழிற்சாலையில், தங்களுக்கும் ஸ்கிராப் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். பின்னர் அவர்கள், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.

ஆனால், பல ஆண்டுகளாக எங்களிடம் அப்துல்ரகுமான், ஸ்கிராப் எடுத்து வருகிறார். அவர் மீது எந்த குறையும் இல்லை. அதனால், அவரை மாற்ற முடியாது என கூறியதாக தெரிகிறது. இந்த காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதேபோன்று சென்னைக்கு அருகில் பெரும்புதூர் பகுதியில் ஸ்கிராப் பிசினஸ் மோதலில் ஒரு தொழிலதிபர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை பிரச்னைக்காக சர்வேயரை அழைத்த போலீசார் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபுரத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசன்தாங்கல் கிராமத்துக்கு சுமார் 5 கி.மீ. தூரம் உள்ளது. இரண்டு மாவட்டங்களுக்கு இடையே கொலை சம்பவம் நடந்ததால், திருவண்ணாமலை தூசி போலீசாரும், காஞ்சிபுரம் தாலுகா போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யவும், ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல்ரகுமானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் இருதரப்பு போலீசாரும் எல்லை பிரச்சனையை காரணம் காட்டி தட்டிக்கழித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் இருந்து சர்வயரை அழைத்து வந்து, சம்பவ இடத்தை அளந்து பார்த்தனர்.

அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் நடந்தது தெரிந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் எல்லை பிரச்னையை காட்டுவதற்கு, நல்ல சமயமாக தேர்வு செய்தனர் என பொதுமக்கள் கடும் வேதனை அடைந்தனர்.

jr
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.