தஞ்சை பட்டுக்கோட்டை சாலை, விபத்து அதிகமாகும் சாலையா?...ஒரத்தநாடு அருகே அரசு பஸ் மோதி பெண் பலி.

ஒரத்தநாடு அருகே தெக்கூர் உப்புண்டார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி பத்மாவதி (வயது 32). ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் எதிரே ஓட்டல் நடத்தி வருகிறார்.

தினமும் அதிகாலை சீக்கிரம் எழுந்து உப்புண்டார்பட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது மனைவி பத்மாவதி மற்றும் அவரது ஓட்டலில் வேலைபார்த்து வரும் அதே ஊரை சேர்ந்த ஜீவஜோதி (38) ஆகியோரை அழைத்துக்கொண்டு ஒரத்தாட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கம் போல் இன்று அதிகாலை செல்வம் அவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஒரத்தநாட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகம் அருகே வந்த அவர் எதிரே உள்ள தனது ஓட்டலுக்கு செல்வதற்காக தஞ்சை பட்டுக்கோட்டை மெயின்ரோட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் பத்மாவதி பஸ்சின் டயருக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி பலியானார். செல்வம், ஜீவஜோதி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசாருக்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள செல்வம் மற்றும் ஜீவஜோதி ஆகியோரை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த பத்மாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாட்டில் அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

12645016_n12573660_417638448426008_1157301951413201385_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.