குரங்கு தன்னுடைய வயிற்றில் நாய்க்குட்டியை சுமந்து வீதியில் சுற்றி திரியும் சம்பவம்.ஆண் குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தன் வயிற்றில் சுமந்து வீதியில் சுற்றி திரியும் சம்பவம் பார்ப்போரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஈரோட்டில் முத்து வேலப்ப வீதியில் வழக்கமாக குரங்கு நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், நேற்று ஒரு ஆண் குரங்குக்கு அந்த வீதியில் இருந்த ஒரு நாய்க்குட்டியை பாசத்துடன் தன் வயிற்றில் சுமந்துக் கொண்டு வீதிகளில் நடமாடிக் கொண்டு இருந்தது.

இதை பார்த்தவர்கள் அந்த குரங்குயை விரட்டிக்கொண்டு இருந்தனர். ஆனால் அந்த நாய்க்குட்டியை கீழே விடாமல் தனது குட்டியை தூக்கி செல்வது போல தூக்கி கொண்டு சென்றது. இந்த குரங்கு அந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக எங்கு சென்றாலும் தன்னுடனே தூக்கி கொண்டு செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும், அந்த ஆண் குரங்கு தனது குட்டியை தொலைத்து விட்டதால் தான், அந்த பகுதியில் இருந்த நாய்க்குட்டியை தனது குட்டியாக நினைத்து பாவித்து வருகிறது என்றனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.

 

i3.php(4)
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.