துபாயில் காணாமல்போன இந்திய தொழிலதிபரின் பிணம் கடலில் கரை ஒதுங்கியது.இந்தியாவைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் எழுதுபொருள் வர்த்தகத்தை செய்தபடி, துபாயில் உள்ள முஹைஸ்னா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவியும் இரு குழந்தைகளும் தாய்நாட்டிற்கு சென்று விட்டனர்.

கடந்த 15-ம் தேதி நடைபெற்ற முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துவந்த அய்யப்பன்(65) கடந்த 13-ம் தேதி திடீரென மாயமானார். கைபேசியை அவர் எடுத்துச் செல்லாததால் அய்யப்பனின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், புஜிரா நகரில் உள்ள டிபா கடற்பகுதியில் கடந்த வியாழக்கிழமை அவரது பிரேதம் மிதப்பதாக தெரியவந்தது. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதே கடற்கரையோரம் அவரது காரும் நின்றிருந்ததால் இது தற்கொலையா? அல்லது விபத்து சார்ந்த மரணமா? என்ற இருவேறு கோணத்தில் விசாரித்து வரும் போலீசார், பிரேதப் பரிசோதனை முடிவு கிடைத்த பின்னரே இந்த மரணத்தின் பின்னணி தொடர்பாக தெரியவரும் என கூறுகின்றனர்.

Missing Indian found dead on beach
Car was parked besides beach

The body of an Indian businessman who went missing last week has been found.

His body was discovered at the beach near Dibba in Fujairah last Thursday, a day after he went missing.

His car was found parked besides the road near the beach.

Aiyappan, who was also the chairman of Natiga SM College Alumni in the UAE, was in-charge of organising a college reunion on January 15.

"We were not able to trace him since January 13. He had not carried his mobile with him and it was later found inside his house," said Pradeep, a close relative.

"We searched everywhere across hospitals and with friends.

“Finally we registered a police complaint on January 14. The police informed us the next day that they had found his body the previous morning at a beach near Fujairah," said Pradeep.

"They were able to identify him as his Emirates ID and car key was inside his pocket," he added.

Aiyappan, aged 65, owned a stationery wholesale business in Dubai, and people who knew him say he was not in any major financial distress.

Aiyappan owned the Al Istamarar office material trading firm in the UAE.

"We are still not sure if it indeed was a suicide or an accident. The forensic examination is on," he says.

A resident of Muhaisnah in Dubai, Aiyappan has been living in the UAE for more than four decades.

He is survived by his wife and two children and they lived here in the UAE until four months ago.


24/7 emirates news.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.