மலேசிய அரசின் சிறந்த குடிமகனுக்கான டத்தோ விருதை வென்ற ராமநாதபுர மாவட்ட இளைஞர்.மலேசிய அரசின் கவுரவமிக்க டத்தோ விருதிற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாக கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப் (35). இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

‘டத்தோ' என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். மலேசியப் பேரரசர், மலேசிய மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்குகின்றனர்.

இந்த விருதானது கடந்த 1965-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டு பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. மலேசியர்களுக்கு மட்டுமே அளிக்கக்கூடிய இந்த விருதை, வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காக பெற்றுள்ளனர்.

அந்த வகையில் கடந்த ஆண்டிற்கான டத்தோ விருதுகள் பெறும் 12 பேரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது யூசுபும் இடம் பெற்றுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.