முத்துப்பேட்டையில் பொங்கல் வியாபாரம் சூடு பிடித்தது. படங்கள் இணைப்பு.முத்துப்பேட்டை குமரன் மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் கிழங்கு உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் கிழங்குகள், ஆவாரம்பூ, மாவிலைகள் உள்ளிட்ட பொருள்கள் அதிகளவில் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. இலையுடன் கூடிய 6 கொத்துகள் கொண்ட ஒரு கட்டு மஞ்சள் கிழங்கு ரூ.50 முதல் ரூ.60 வரையிலும், பூ மாலைகள் ரூ.50 முதல் ரூ.800 வரையிலும் விற்கப்படுகின்றன.

இதேபோல் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் வரை ரூ.300 வரை தரத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழர்களால் மறக்கப்பட்டு வரும் கொட்டாங்கச்சியால் செய்யப்பட்ட அகப்பை, வைக்கோலால் செய்யப்பட்ட பிருமனை ஆகியவைகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

இவற்றை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.

குமரன் பஜாரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிநாட்டில் இருக்கும் முத்துப்பேட்டை மீடியா நேயர்களுக்காக...

[gallery columns="2" ids="30362,30363,30364,30365,30366,30367,30368,30369,30370,30371,30372,30373,30374,30375,30376,30377,30378,30379,30380,30381,30382,30383,30384,30385,30386,30387,30388,30389,30390,30391,30392,30393"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.