முத்துப்பேட்டை அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை. காரணம் என்ன? போலீஸ் விசாரணைமுத்துப் பேட்டை அருகே வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.முத்துப் பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் குணசேகரன் (35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.

குணசேகரன் தன் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இந் நிலையில் குணசேகரனுக்கு முத்துப் பேட்டை அடுத்த கீழ நம்மங்குறிச்சியை சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இருவரும் சேர்ந்து வெளி மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் செய்து வருவதாகவும் ஒரு குற்றச் சாட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் அதே கிராமத்தில் உள்ள நாகராஜன் என்பவரது சாகுபடி வயலில் குணசேகரன் கழுத்து மற்றும் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அப் பகுதியில் மாடு மேய்க்க சென்ற சிலர் பார்த்து முத்துப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி திருத்துறைப் பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப் பட்ட குணசேகரன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த அந்த பெண்ணின் கணவர் பெயரும் குணசேகரன் என்பதால், அவரது பாஸ் போர்ட்டில் வெளிநாடு செல்வதற்காக அந்த பெண்ணிடம் பாஸ் போர்ட்டை கேட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண்ணும், அவரது மகன்களும் குணசேகரனை திட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினகரன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.