துபாயில் மர்மமாக இறந்து கிடக்கும் இவர் யார்?: அடையாளம் தெரிந்தால் உதவலாம்.துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தெற்கேயுள்ள அல் ரஷிதியா பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அந்நாட்டு போலீசார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளனர்.

இறந்து கிடக்கும் நபர் காணாமல் போனதாக புகார் ஏதும் வராத நிலையில் இவர் யார்?, எந்த நாட்டை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பது தெரியாமல் இருப்பதால் இதுதொடர்பாக தங்களுக்கு உதவும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண்: 04-60 95 555 மற்றும் ரஷிதியா நகர போலீஸ் நிலைய தொலைபேசி எண்: 04-28 53 000 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முகஅமைப்பை வைத்து பார்க்கும்போது இந்தியரைப்போல் தெரிவதால் முத்துப்பேட்டைமீடியா வாசகர்கள் இந்த செய்தியை சமூக வலைத்தளங்களின் மூலமாக அதிகம் பகிர்ந்து இவரை அடையாளம் காண உதவலாம்.

783ad831-acfe-4af5-b785-5d7403d4a88a_S_secvpf.gif
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.