உலகிலேயே அதிக நேர விமான சேவையை ஆரம்பிக்கும் கத்தார் ஏர்லைன்ஸ்.உலகிலேயே நீண்ட நேர விமான சேவையை கட்டார் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. தோஹா- ஆக்லாந்து இடையே விமான சேவை துவக்கப்பட்டால், அந்த விமானம் 9,034 மைல் தூரத்தை 18 மணி நேரம் 34 நிமிடங்களில் கடக்கும்.


சில மணி நேரத்திற்குள் நாடு விட்டு நாடு செல்வதற்குத்தான் விமானப் பயணம் என்றாலும், அப்படிச் செல்வதற்கு பல மணி நேரத்திற்கும் மேல் பிடிக்கும் தொலை தூர விமானப் பயணங்களும் இருக்கின்றன. அந்த வகையில், 8,578 மைல் தூரத்தை 16 மணி நேரம் 55 நிமிடங்களில் கடக்கும் டல்லாஸ் - சிட்னி செல்லும் க்வாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவையே இதுவரை தொலைதூரப் பயணத்தின் ராஜாவாக இருந்தது.

இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இருந்து நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்துக்கு, நேரடி விமான போக்குவரத்து சேவை துவங்க கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விமான சேவையின் பயண நேரம் சுமார் 18 மணி நேரமாக இருக்கும். இதுவே உலகின் நீண்ட நேர விமான சேவையாகும். 259 பயணிகளுடன், போயிங் 777-LR ரக ஜம்போ விமானத்தின் மூலம் இந்த சேவையை தொடங்க கத்தார் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.

தோஹா- ஆக்லாந்து இடையே விமான சேவை துவக்கப்பட்டால், அந்த விமானம் 9,034 மைல் தூரத்தை 18 மணி நேரம் 34 நிமிடங்களில் கடக்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இது ஒரு சாதனை பயணமாக இருக்கும் என கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.